3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்


3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்
x
தினத்தந்தி 6 Nov 2022 2:27 AM IST (Updated: 6 Nov 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 5 மாதங்களுக்குள் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் சீரமைக்கப்படும் என்று மாநகரட்சி என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலை பள்ளங்கள் விரிவடைந்து விடுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பணிகள் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் அடுத்த 5 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி என்ஜினீயர் கூறிள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சாலை பள்ளங்களை மூடுவது குறித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாலை பள்ளங்கள் மூடப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெறுகிறது. விரைவில் அடுத்த 5 மாதங்களில் பெங்களூருவில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.


Next Story