அம்மா திட்டுறாங்க; போலீசில் புகார் அளிக்க வந்த 3-வது சிறுவன்


அம்மா திட்டுறாங்க; போலீசில் புகார் அளிக்க வந்த 3-வது சிறுவன்
x

மத்திய பிரதேசத்தில் 3-வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்க வந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தின் பர்ஹான்பூரிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சமீபத்தில் 3 வயது சிறுவன் தன் தந்தையுடன் சென்றான். அங்கு, தன் தாய் அடிக்கடி திட்டுவதாகவும், தன் மிட்டாய்களை திருடிவிட்டதாகவும் கூறினான். இதை புகாராக எழுதிய போலீசார், அக்குழந்தையிடம் கையெழுத்து கேட்டனர். அவனும் அதில் ஏதோ கிறுக்கலாக எழுதினான். இது பற்றி சிறுவனின் தந்தை போலீசாரிடம் கூறுகையில், 'தாய் பற்றி புகார் அளிக்க வேண்டும் என என் மகன் அடம்பிடித்ததால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தேன்' என்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. . இதைப் பார்த்த மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, அக்குழந்தையிடம் 'வீடியோ கால்' வாயிலாக பேசினார்.

அப்போது, அவனுக்கு சைக்கிளும், சாக்லேட்டுகளும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.இதன்படி, சில மணி நேரம் கழித்து, போலீசார் அச்சிறுவனுக்கு சைக்கிளையும், சாக்லேட்டுகளையும் அமைச்சர் பரிசாக அளித்ததாகக் கூறி வழங்கினர்.


Next Story