பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில்  ரூ.35 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வெளிநாட்டு பணம் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அபுதாபிக்கு செல்ல இருந்த விமானத்திற்கு காத்திருந்தவர்களை சோதனை செய்தனா். அப்போது வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடைமைகளில் சோதனை செய்தபோது அதில் (இந்திய ரூபாய் மதிப்பில்) ரூ.35 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருந்தது.

விசாரணையில், அவர் தமிழ்நாட்டை சேர்ந்த நயினார் கனிபா என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை தேவனஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் இதேபோல் பலமுறை வெளிநாட்டு பணத்தை கடத்தி சென்றது தெரியவந்தது.


Next Story