பெங்களூருவில், சுதந்திர தினவிழாவின் போது அரசு பஸ்களில் 35 லட்சம் பயணிகள் இலவச பயணம்


பெங்களூருவில், சுதந்திர தினவிழாவின் போது  அரசு பஸ்களில் 35 லட்சம் பயணிகள் இலவச பயணம்
x

பெங்களூருவில், சுதந்திர தினவிழாவின் போது அரசு பஸ்களில் 35 லட்சம் பயணிகள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் சுதந்திர தின பவள விழா காரணமாகவும், பெங்களூரு போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி) தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டியும் கடந்த 15-ந் தேதி அரசு பஸ்களில் பயணிகள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால், கடந்த 15-ந் தேதி அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. அன்றைய தினம் சாதாரண பஸ்களிலும், குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பஸ்களிலும் பயணிகள் இலவகமாக பயணித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி சுதந்திர தினநாளில் பெங்களூருவில் அரசு பஸ்களில் 32 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான பயணிகள் இலவசமாக பயணம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக அரசு பஸ்களில் 27 லட்சம் முதல் 29 லட்சம் பேர் சராசரியாக பயணிப்பார்கள். கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால், கூடுதலாக பயணிகள் அரசு பஸ்களில் பயணித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story