கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் 350 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல்
கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் 350 பக்கம் குற்றப்பத்திரிகை உப்பள்ளி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
உப்பள்ளி:
கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை
தார்வார் தாலுகா கங்கிவாலா கிராமத்தை சேர்ந்தவர் தீபக். இவர், ராயணாலா கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 4-தேதி தீபக் படுகொலை செய்யப்பட்டார்.
இத்றகிடையே அவரது மனைவி புஷ்பா கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நவநகர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் கணவரின் கொலைக்கு சாட்சி என்னிடம் இருப்பதால் எனக்கு கொலை மிரட்டல் விடப்படுவதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமான வழக்கை தீபக்கின் சகோதரர் கேட்டுக்கொண்ட படி சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு வந்தது. அதன்பேரில் சி.ஐ.டி. போலீசார் விசாரித்து 10 பேரை கைது செய்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையில் நேற்று தீபக் கொலை வழக்கில் 350 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தயார் செய்து உப்பள்ளி 4-வது குற்றவியல் கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் கைதான 10 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.