கர்நாடகத்தில் புதிதாக 390 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 390 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 390 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 24 ஆயிரத்து 175 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 390 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதில் பெங்களூரு நகரில் 205 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 18 பேருக்கும், குடகில் 35 பேருக்கும், மைசூருவில் 18 பேருக்கும், ராமநகரில் 20 பேருக்கும், சிவமொக்காவில் 13 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 490 பேர் குணம் அடைந்தனர். 3 ஆயிரத்து 334 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா பாதிப்பு விகிதம் 1.61 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story