4 குழந்தைகளுக்கு 'சந்திரயான்' பெயர்
ஒடிசாவில் 4 குழந்தைகளுக்கு 'சந்திரயான்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புவனேசுவர்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதன்மூலம் விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில் நிலவின் மேற்பரப்பில் செயற்கைகோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்ட ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு 'சந்திரயான்' என பெயரிடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 'விக்ரம்' லேண்டர் மெதுவாக தரையிறங்கி சாதனை படைத்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஒரு பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகளுக்கு 'சந்திரயான்' என்னும் பெயரை பெற்றோர்கள் சூட்டினர்.
Related Tags :
Next Story