புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
புனே,
புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலம் புனேவில் இன்று அதிகாலையில் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு லாரியும் தனியார் சொகுசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் புனேவின் அம்பேகான் பகுதியில் உள்ள நர்ஹே கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story