இரும்பு குழாய்கள் திருடிய 4 பேர் கைது


இரும்பு குழாய்கள் திருடிய 4 பேர் கைது
x

சிவமொக்காவில் இரும்பு குழாய் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா:-

சிவமொக்கா நகரில் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக லக்கினகொப்பா பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இரும்பு குழாய்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ மர்மநபர்கள், அந்தப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு குழாயை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து துங்காநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இரும்பு குழாய்கள் திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள், லக்கினகொப்பாவை சேர்ந்த பவன், தேசி, ரமேஷ், வாசீம் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு லாரி மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இரும்பு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story