இ-சிகரெட் விற்ற 4 பேர் கைது


இ-சிகரெட் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இ-சிகரெட் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அசோக் நகர்:

பெங்களூரு ரிச்மவுண்ட் ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 4 கடைகளில் இ-சிகரெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கடைகளை நடத்தி வந்த ஹாரிஸ், இப்ராஹிம், ஜாபர், முகமது மீரஜ் ஆகிய 4 பேரையும் அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும், ஒரு இ-சிகரெட்டை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவர்கள் நடத்திய வந்த கடைகளில் இருந்து ரூ.3½ லட்சம் மதிப்பிலான இ-சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story