காசோலை மோசடி வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 4 ஆண்டு சிறை
காசோலை மோசடி வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெங்களூரு:
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குமாரசாமி. இவர் ஹுவப்பா கவுடா என்பவரிடம் இருந்து ரூ.1¼ கோடியை கடனாக வாங்கி இருந்தார். இதையடுத்து ஹுவப்பா கவுடா, குமாரசாமியிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார். அப்போது அவர் காசோலையை வழங்கினார். அந்த காசோலையை எடுத்து கொண்டு ஹுவப்பா கவுடா, வங்கிக்கு சென்றார். அப்போது அதிகாரிகள், வங்கி கணக்கில் பணம் இல்லை என கூறி அவரை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து அவர், எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, அவர் மற்றொரு காசோலையை வழங்கி உள்ளார். இதேபோல் அவர் 8 முறை காசோலையை வழங்கி உள்ளார். அனைத்து காசோலையும் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதுதொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை முடித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமலும், காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாலும் எம்.எல்.ஏ. குமாரசாமிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.