தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி கொலை வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சிவமொக்கா:

கொலை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவை சேர்ந்தவர் சேத்தன் (வயது 21). தொழிலாளி. இவரது பெரியம்மாவுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான சிவருத்ரப்பா என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக ஒரு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இருவீட்டாரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சேத்தனின் பெரியம்மாவுக்கும், சிவருத்ரப்பாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவீட்டாரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அந்த வழியாக சேத்தன் சென்றார். இதையடுத்து சேத்தன் சண்டையை விலக்கிவிட முயன்றார். அப்போது சிவருத்ரப்பாவின் உறவினர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சேத்தனை வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து சேத்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக பத்ராவதி பழைய டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், சேத்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

4 ஆண்டு சிறை

விசாரணையில் பழைய பிரச்சினை தொடர்பாக இருவீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டதும், அதை தடுக்க முயன்றபோது ேசத்தனை மற்றொரு தரப்பை சேர்ந்த அதே பகுதியில் வசித்து வரும் மனு சிங் (20) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மனு சிங்கை கைது செய்தனர்.

அதுதொடர்பான வழக்கு சிவமொக்கா 4-வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். விசாரணையின்போது நீதிபதி சசிதார், இருவீட்டார் பிரச்சினையை தீர்க்க சென்ற வாலிபரை, மனு சிங் வெட்டி கொலை செய்தது உறுதியாகி உள்ளது. எனவே அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story