மராட்டியத்தில் பாஜகவில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனாவில் இணைந்த தொண்டர்கள்!


மராட்டியத்தில் பாஜகவில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனாவில் இணைந்த தொண்டர்கள்!
x
தினத்தந்தி 15 Nov 2022 4:17 PM IST (Updated: 15 Nov 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் திரளாக இணைந்தனர்.

மராட்டிய மாநில லத்தூரில் உள்ள காங்கிரஸ்-பாஜக கட்சியினர் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப்பன்ஜி சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் இணைந்தனர்.இதில் பாஜகவின் முன்னாள் தலைவர் பாலாஜி அட்சுல், ராஜ்குமார் கலாமே மற்றும் முன்னாள் கார்ப்பரேட்டர் பிரகாஷ் பாட்டீல் வஞ்சர்கேத்கர் ஆகியோர் அடங்குவர். புதிய தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று பங்கேற்றார்.

மராட்டிய மாநிலத்தில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார். இந்நிலையில், பாஜக தொண்டர்கள் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்துள்ளது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story