400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் கண்டெடுப்பு
குந்தாப்புரா அருகே பூங்காவில் 400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் கண்டெடுக்கப்பட்டது.
மங்களூரு-
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா பஸ்ரூர் கிராமத்தில் அசோகா பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சீரமைப்பு பணியின்போது, அங்கு பழங்கால கல் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த கல்லில் சூரியன், சந்திரன், சிவலிங்க முத்திரை, நந்தி உள்ளிட்ட வடடிவங்கள் இருந்தன. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது அந்த கல் 400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் என்பது தெரியவந்தது. ஆனால் எந்த மன்னர் காலத்து கல் என்பது தெரியவில்லை. இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த கல்லை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story