ஹரித்வார் சிறையில் 43 கைதிகளுக்கு கொரோனா
ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள , 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சிறை அதிகாரி கூறுகையில், " கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என கூறினார்
Related Tags :
Next Story