பண்ணைக்குள் புகுந்த மழைநீர்; 45 ஆயிரம் கோழிகள் செத்தன


பண்ணைக்குள் புகுந்த மழைநீர்; 45 ஆயிரம் கோழிகள் செத்தன
x

மழைநீர், பண்ணைக்குள் புகுந்ததால் 45 ஆயிரம் கோழிகள் செத்தன.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஹெப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எலடஹள்ளி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது.

இதில் அந்த கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 45 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி செத்தன. இதுபற்றி அறிந்ததும் கோழி பண்ணைக்கு சென்ற நாராயணப்பா செத்து கிடந்த கோழிகளை பார்த்து கண்ணீர்விட்டு அழுதார். மேலும் அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் செத்து கிடந்த கோழிகளை பார்வையிட்டு நாராயணப்பாவிடம் விசாரித்தனர். அப்போது மழைநீரில் மூழ்கி ரூ.80 லட்சம் மதிப்பிலான கோழிகள் செத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஹெப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story