பக்ரீத்திற்கு விற்பனை செய்ய வைத்திருந்த 450 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்


பக்ரீத்திற்கு விற்பனை செய்ய வைத்திருந்த  450 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
x

துமகூருவில் பக்ரீத்திற்கு விற்பனை செய்ய வைத்திருந்த 450 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு: கா்நாடகத்தில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி துமகூருவில் பல பகுதிகளில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துமகூரு மாவட்டம் அம்ருத்தூர் அருகே பிசினேலே கிராமத்தில் உள்ள இறைச்சி கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு15 பசு மாடுகள் உள்பட 29 மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 29 மாடுகளும் மீட்கப்பட்டது. அதே நேரத்தில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டி, அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காக தலா 2கிலோ எடையில் பைகளில் போட்டு வைத்திருந்ததும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, கடையில் இருந்த 450 கிலோ மாட்டு இறைச்சியையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். போலீசார் வருவது பற்றி அறிந்ததும் கடை உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அம்ருத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.


Next Story