மராட்டியம்: எங்கள் வசம் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா் - ஏக்நாத் ஷிண்டே அதிரடி


மராட்டியம்: எங்கள் வசம் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா் - ஏக்நாத் ஷிண்டே அதிரடி
x
தினத்தந்தி 22 Jun 2022 4:25 PM IST (Updated: 22 Jun 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா எம்.எல்.ஏக்கள் 40- க்கும் மேற்பட்டோா் தனக்கு ஆதரவாக உள்ளதாக மராட்டிய மந்திாி ஏக்நாத் ஷிண்டே தொிவித்துள்ளனா்.

மும்பை,

சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதையடுத்து மாநிலத்தை ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு சிவசேனா கட்சியை சேர்ந்த 33 எம்எல்ஏக்கள் ஆளும் மகா விகாஸ் கூட்டணி எதிராக திரும்பி உள்ளதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஏக்நாத் ஷிண்டே தொிவிக்கையில், தற்போது எங்களிடம் 6 சுயேட்சை எம்எல்ஏக்கள், 40 சிவசேனா எம்எல்ஏக்கள் என 46 போ் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் உயரும்.

தற்போது பாஜகவிடம் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்த வரை, நாங்கள் பாலாசாகேப் தாக்கரேவின் சிவ சேனாவினா் என்றும், தொடர்ந்து சிவ சேனாவாக இருப்போம் என்றாா். சிவசேனா மற்றும் உத்தவ் தாக்ரேவுடன் நாங்கள் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

மேலும், எதிா்கால நடவடிக்கை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அவா் கூறினாா்.


Next Story