முஸ்லிம் மாணவிகள் 46 பேர் வகுப்புகளுக்கு திரும்பினர்
முஸ்லிம் மாணவிகள் 46 பேர் வகுப்புகளுக்கு திரும்பினர்
தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி பகுதியில் அரசு பி.யூ. கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான முஸ்லிம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்வி நிலையங்களில் 'ஹிஜாப்' அணிய அரசு தடை விதித்ததால் கல்லூரிக்கு வரும் மாணவிகள் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்குள் செல்லும்படி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதற்கு 46 முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்களில் 6 பேரை முதலில் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. அதையடுத்து 24 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிரச்சினைக்குரிய 46 முஸ்லிம் மாணவிகளும் நேற்று முன்தினம் வகுப்புகளுக்கு வந்தனர். அவர்கள் கல்லூரி வரை ஹிஜாப் அணிந்து வந்த நிலையில், வகுப்பறைக்குள் செல்லும்போது ஹிஜாப்பை கழற்றிவிட்டு சென்றனர்.