வேலை தொடர்பான பிரச்சினைகளால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் 480 பேர் தற்கொலை


வேலை தொடர்பான பிரச்சினைகளால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் 480 பேர் தற்கொலை
x

வேலை தொடர்பான பிரச்சினைகளால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் 480 பேர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

இந்தியாவில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள், தற்கொலைகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்கள் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) வேலை தொடர்பான பிரச்சினைகளால் இந்தியாவில் 2,593 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்கள் அடிப்படையில் தற்கொலை வழக்குகளில் மராட்டியம் முதல் இடத்திலும், கர்நாடகம் 2-வது இடத்திலும் உள்ளது. கர்நாடகத்தில் வேலை தொடர்பான பிரச்சினைகளால் கடந்த ஆண்டு (2021) 480 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் தலைநகர் பெங்களூருவில் மட்டும் 74 பேர் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மனநல ஆலோசகர் ஒருவர் கூறும்போது, 'கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் வேலையை இழந்தவர்கள் மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வேலையை இழந்ததும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முடிவை தேடி கொள்கின்றனர். வேலையில் இருப்பவர்களுக்கு சரியாக சம்பளம் கிடைக்காதது, உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும்' என்றார்.

======


Next Story