வியாபாரிகளை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது


வியாபாரிகளை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது
x

சிவமொக்கா அருகே வியாபாரிகளை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது ரூ.3.15 லட்சம் பறிமுதல் செய்தனர்.

சிவமொக்கா:-

சிக்கமகளூரு மாவட்டம் பாலேஒன்னூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது நண்பர் சந்தோஷ். வியாபாரிகளான இவர்கள் கடந்த 6-ந் தேதி சிவமொக்காவில் விவசாயிகளிடம் பாக்கு வாங்க காரில் சென்றனர். அப்போது அவரது காரை மறித்த மர்மநபர்கள், அவர்களை ஏமாற்றி கடத்தி சென்றனர். பின்னர் அவர்களை தாக்கி ரூ.5 லட்சத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து துங்காநகர் போலீசில் சுரேஷ்குமார், சந்தோஷ் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவமொக்கா கோபாலா பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாயக் (வயது35), சிகாரிபுராவை சேர்ந்த ஆசிப் உல்லா (32), கொனகவள்ளியை சேர்ந்த கணேஷ் நாயக்(28), டேங்க் மொஹல்லா தாவல் பகுதியை சேர்ந்த படிகி (35), ஆர்.எம்.எல்.நகரை சேர்ந்த ரிஸ்வான் அகமத் (48) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.3.15 லட்சம் ெரக்கப்பணம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story