5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்


5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சேத்தன், உளவுத்துறை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் குற்றப்பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் சீமா லட்கர், மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இனி பணியாற்றுவார்.

* கதக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரகாஷ் தேவராஜ், பெங்களூரு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மைசூருவில் உளவுத்துறையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் முத்துராஜ், மைசூரு நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் பாபாசாப் நேமகவுட், கதக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இனி பணியாற்றுவார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story