வாலிபரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி


வாலிபரிடம் ரூ.5 லட்சம்  நூதன மோசடி
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு திலக்நகரை சேர்ந்தவர் மனோஜ் கவுடா(வயது 21). இந்த நிலையில் மனோஜை தொடர்பு கொண்டு பேசிய சீனிவாஸ் என்பவர் தன்னை ஆடிட்டர் என்று கூறியுள்ளார். மேலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி உள்ளார்.

இந்த நிலையில் மைசூரு ரோடு சாட்டிலைட் பஸ் நிலையம் அருகே வைத்து சீனிவாசை சந்தித்து பேசிய மனோஜ் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய ரூ.5 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் சீனிவாசை, மனோஜால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தன்னை ஏமாற்றி ரூ.5 லட்சத்தை சீனிவாஸ் நூதன முறையில் மோசடி செய்தது மனோஜுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பேடராயனபுரா போலீஸ் நிலையத்தில் சீனிவாஸ் மீது மனோஜ் புகார் அளித்து உள்ளார்.


Next Story