பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பயணிகளை மிரட்டி கொள்ளையடித்த 5 பேர் கைது


பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பயணிகளை மிரட்டி கொள்ளையடித்த 5 பேர் கைது
x

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பயணிகளை மிரட்டி கொள்ளையடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு-மைசூரு இடையே விரைவுச்சாலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். அதற்கு முன்பாகவே விரைவுச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்த விரைவுச்சாலையில் செல்லும் கார் உள்ளிட்ட வாகனஙகளை வழிமறித்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், அவர்களை தாக்கியும் ஒரு கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தனர். ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் உள்ள விரைவுச்சாலையில் கார்களில் இருந்த பயணிகளை மிரட்டி பல லட்சம் ரூபாய் நகை, பணத்தை ஒரு கும்பல் சமீபத்தில் கொள்ளையடித்து இருந்தது.

இதுகுறித்து சென்னப்பட்டணா புறநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பயணிகளை மிரட்டி கொள்ளையடித்ததாக 5 பேரை சென்னப்பட்டணா போலீசார் கைது செய்துள்ளனர். 5 பேரும் ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் விரைவுச்சாலையில் பயணிகளிடம் கொள்ளையடித்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story