இமாசலபிரதேசத்தில் பனியில் சிக்கிய 5 சுற்றுலா பயணிகள் மீட்பு


இமாசலபிரதேசத்தில் பனியில் சிக்கிய 5 சுற்றுலா பயணிகள் மீட்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 10 May 2023 3:27 AM IST (Updated: 10 May 2023 3:32 AM IST)
t-max-icont-min-icon

பேரில் அங்கு விரைந்த மீட்பு குழு பனியில் சிக்கி தவித்து வந்த சுற்றுலா பயணிகள் 5 பேரை பத்திரமாக மீட்டது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பலஅடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன.

இந்த நிலையில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் சிக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த மீட்பு குழு பனியில் சிக்கி தவித்து வந்த சுற்றுலா பயணிகள் 5 பேரை பத்திரமாக மீட்டது.


Next Story