ஏரி திட்டம் தோல்வி அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.500 கோடி அபராதம்


ஏரி திட்டம் தோல்வி அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.500 கோடி அபராதம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனேக்கல்லில் சோளரே கட்டி ஏரி திட்டம் தோல்வியடைந்ததால் அதற்கான செலவு தொகை ரூ.500 கோடியை அரசே செலுத்தவேண்டும் மத்திய பசுமைக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

ஆனேக்கல்:-

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சந்தாபுரா பகுதியில் சோளரே கட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் ஏரி நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனை அரசு கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. ஏரியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து, அங்குள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த நிலையில், ஏரியை முறையாக பராமரிக்கவில்லை என கூறி தேசிய பசுமை தீர்ப்பாயம், கர்நாடக அரசுக்கு ரூ.500 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் அபராத தொகையை ஏரியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர் சந்தோஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சோளரே கட்டி ஏரி, அசுத்தம் ஆக அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகளே காரணம். அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர், ஏரியில் கலப்பதால் தான் மீன்கள் செத்து மிதப்பதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.500 கோடி அபராத தொகையை, ஏரியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றார்.


Next Story