கர்நாடகத்தில் ரூ.2,750 கோடியில் 53 திட்டங்களுக்கு அனுமதி; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்


கர்நாடகத்தில் ரூ.2,750 கோடியில் 53 திட்டங்களுக்கு அனுமதி; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்
x

கர்நாடகத்தில் ரூ.2,750 கோடியில் 53 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் தொழில்துறை மந்திரியான முருகேஷ் நிரானி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கா்நாடகத்தில் தொழில்துறையின் கீழ் செயல்படும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் தொழில்துறையில் 53 திட்டங்களை செயல்படுத்துவதற்கான முதலீடுகள் கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ.2 ஆயிரத்து 750 கோடி முதலீடு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் 53 திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் கர்நாடகத்தில் புதிதாக 8 ஆயிரத்து 619 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.50 கோடி வரையிலான திட்டங்கள், தொழில்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ரூ.15 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரையிலான 41 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தொழில்துறை முதன்மை செயலாளர் ரமணரெட்டி உடன் இருந்தார்.


Next Story