ஆந்திரா குண்டூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு


ஆந்திரா குண்டூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
x

ஆந்திர அருகே உள்ள குண்டூர் மாவட்டம் பத்திப்பாடு என்ற பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசம் மாநிலம் செப்ரோலு மண்டலத்தில் உள்ள ஜூபுடி பகுதியில் நடைபெற்ற உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 40 பேர் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது குண்டூர் மாவட்டத்தில் வத்திசெருகூரில் சென்றபோது திடீரென டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரத்திபாடு மண்டலம் கொண்டேபாடு பகுதியைச் சேர்ந்த மிக்கிலி நாகம்மா, மாமிடி ஜான்சிராணி, கட்டா நிர்மலா, கரிகாபுடி மேரிம்மா, கரிகாபுடி ரத்னகுமாரி மற்றும் கரிகாபுடி சுஹாசினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பக்கத்து கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story