2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு: 6 மாநிலங்களில் விலையை குறைக்கவில்லை - மத்திய அரசு தகவல்


2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு:  6 மாநிலங்களில் விலையை குறைக்கவில்லை - மத்திய அரசு தகவல்
x

நவம்பர் 2021 மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ 27.276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன. சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

நவம்பர் 2021 மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

தமிழகம்,மேற்கு வங்காளம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரியை குறைக்காததால் அங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறது என மக்களவையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.


Next Story