கர்நாடகத்தில் புதிதாக 673 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 673 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் இன்று 13 ஆயிரத்து 503 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

kபெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று 13 ஆயிரத்து 503 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 673 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 621 பேருக்கும், மைசூருவில் 10 பேருக்கும், பெலகாவி, பல்லாரி, தார்வாரில் தல 4 பேருக்கும், சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, கலபுரகியில் தலா 3 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கதக்கில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். 6,718 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story