உ.பி.யில் வினோதம்: மாவட்ட கலெக்டரின் பசுவை பராமரிக்க தினசரி ஒரு மருத்துவர் வீதம் 7 பேர் நியமிக்கப்பட்டதால் சர்ச்சை!


உ.பி.யில் வினோதம்: மாவட்ட கலெக்டரின் பசுவை பராமரிக்க தினசரி ஒரு மருத்துவர் வீதம் 7 பேர் நியமிக்கப்பட்டதால் சர்ச்சை!
x
தினத்தந்தி 12 Jun 2022 4:30 PM GMT (Updated: 12 Jun 2022 4:50 PM GMT)

பதேபூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் உள்ள பசுவை கவனிக்க கால்நடை மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

பதேபூர் மாவட்ட முதன்மை கால்நடை மருத்துவர் அலுவலகத்தில் இருந்து, அரசு கால்நடை மருத்துவர்கள் குழுவுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் பதேபூர் மாவட்ட கலெக்டர் அபூர்வா துபே(ஐஏஎஸ்) வீட்டில் உள்ள பசுவை கவனிக்க கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதேபூர் தலைமை கால்நடை மருத்துவ அதிகாரியான டாக்டர் எஸ்.கே. திவாரி, வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒருவர் என ஏழு மருத்துவர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று வெளியான இந்த ஆணை, மறுநாளே வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது

அவர் அனுப்பிய அறிக்கையில், 'மாவட்ட கலெக்டரின் பசுவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தினமும் காலை மற்றும் மாலையில் கீழ்கண்ட கால்நடை மருத்துவ அலுவலர்களின் பணி விதிக்கப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தார்கள் என்ற அறிக்கையையும், ஒவ்வொரு நாளும் மாலை 06:00 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.


மேலும், பட்டியலிடப்பட்ட மருத்துவர்களில் எவரேனும் ஒருவர் விடுமுறை எடுத்துக்கொண்டால், பசுவை பராமரிக்க தவறினால், அந்த நாளில் பணியில் இல்லாத இன்னொரு மருத்துவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இந்த பணியின் மெத்தனம் கட்டைனால் மன்னிக்க முடியாது. அகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டரின் பசுவை பராமரிக்க 7 பேர் கொண்ட அரசு கால்நடை மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டதும், அதற்கான ஆணை குறிப்பும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story