மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்பிலான 703 கிலோ போதை பொருள் பறிமுதல்


மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்பிலான 703 கிலோ போதை பொருள் பறிமுதல்
x

ரூ.1,400 கோடி மதிப்பிலான 703 கிலோ எடை கொண்ட போதை பொருள் மும்பையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.



மும்பை,



மராட்டியத்தின் மும்பை நகரில் பால்கர் மாவட்டத்தில் நலசோபரா நகரில் போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியதில், சந்தேகத்திற்குரிய வகையிலான சில நபர்கள் சிக்கினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போதை பொருள் கடத்தலில் அவர்கள் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 703 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி. வகை போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடைய நபர்களை பற்றி கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போதை பொருள் ஒழிப்பு பிரிவு துணை காவல் ஆணையாளர் தத்தா நலவாடே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


Next Story