அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கேளிக்கை விடுதியில் குத்தாட்டம்: இளம்பெண்கள் உள்பட 75 பேர் கைது


அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கேளிக்கை விடுதியில் குத்தாட்டம்: இளம்பெண்கள் உள்பட 75 பேர் கைது
x

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கேளிக்கை விடுதியில் குத்தாட்டமிட்ட இளம்பெண்கள் உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு கெங்கேரி பகுதியில் ஒரு கேளிக்கை விடுதி உள்ளது. இந்த நிலையில் இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் அந்த கேளிக்கை விடுதி திறந்து இருப்பதாகவும், அங்கு விருந்து நிகழ்ச்சி நடப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த கேளிக்கை விடுதிக்கு சென்று போலீசார் சோதனைநடத்தினர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அந்த கேளிக்கை விடுதி திறந்து இருந்ததும், அங்கு குடிபோதையில் வெளிநாட்டு வாலிபர்கள், இளம்பெண்கள் குத்தாட்டம் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 45 வாலிபர்கள், 30 இளம்பெண்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்களா என்று கண்டறிய சோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story