தசரா விழாவில் பங்கேற்கும் 8 யானைகளுக்கு நடைபயிற்சி தொடக்கம்


தசரா விழாவில் பங்கேற்கும் 8 யானைகளுக்கு நடைபயிற்சி தொடக்கம்
x

தசரா விழாவில் பங்கேற்கும் 8 யானைகளுக்கு நடைபயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மைசூரு:-

தசரா விழா

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா நடத்தப்படுகிறது. இந்த தசரா விழா உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் வரை நடக்கிறது.

இந்தநிலையில் தசரா விழாவில் பங்கேற்கும் முதற்கட்டமாக அபிமன்யு, அர்ஜுனா, பீமா, கோபி, தனஞ்செயா, வரலட்சுமி, விஜயா, மகேந்திரா, கஞ்சன் ஆகிய 9 யானைகள் உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்ட வீரனஓசஹள்ளி கிராமத்தில் இருந்து மைசூரு அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கடந்த 2-ந்தேதி அழைத்து வரப்பட்டன.

நேற்றுமுன்தினம் அர்ஜுனா யானை தவிர மற்ற 8 யானைகள் வனத்துறை அலுவலகத்தில் இருந்து அரண்மனை வளாகத்திற்கு பராம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டன.

இந்தநிலையில் முதல் நாளான நேற்று காலை 7 மணிக்கு 8 யானைகளும் ராஜபாதை வழியாக பாகன்கள் அழைத்து வரப்பட்டு எடை அளவு கணக்கீடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த 8 யானைகளுக்கு காைல 7 மணி முதல் காலை 9 மணி வரை மற்றும் மாைல 4 மணி முதல் இரவு 7 மணி வரை தினமும் 2 நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது அரண்மனை வளாகத்தில் பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை யானைகள் நடைபயற்சி மேற்கொண்டது. யானைகள் செல்லும் பாதையில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

யானைகள் செல்லும் சாலையில் ஜீப்பில் காந்தம் கொண்ட சாதனம் பொருத்தி யானைகளுக்கு முன்னாடி செல்கிறது. காரணம் சாலைகளில் இரும்பு, ஆணி, இரும்பு கம்பி, தகரம் போன்ற இரும்பு பொருட்கள் அந்த காந்தத்தில் ஒட்டி கொள்ளும். அதாவது ஆனி போன்ற இரும்பு பொருட்களை யானைகள் மிதித்தால் காயம் ஏற்பட்டுவிடும். யானைகள் செல்லும் பாதைகள், பயிற்சி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story