சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை


சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அனீசுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 31). இவர் கடந்த 2022-ம் ஆண்டு 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வடக்கேகாடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அனீஷ் சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அனீஷை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை குன்னம்குளம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அனீசுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிஷா தீர்ப்பளித்தார்.


Next Story