கர்நாடகத்தில் கண்தானம் செய்ய 85 ஆயிரம் பேர் பதிவு
கர்நாடகத்தில் கண்தானம் செய்ய 85ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) தனது 45-வது வயதில் உயிரிழந்தார். அவர் தனது கண்களை தானம் செய்திருந்தார். அதன்படி அவரது கண்கள் தானமாக எடுக்கப்பட்டது. அவரது இந்த கண்தான முடிவுக்கு பின்னர், கர்நாடகத்தில் கண்தானம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் ராஜ்குமார் கண் வங்கி அதிகாரி கூறுகையில், கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கண்தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும், அதற்கு உறுதிமொழி ஏற்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக புனித் ராஜ்குமாரின் கண்தான சேவைக்கு பின்னர் இதுவரை 85 ஆயிரம் பேர் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். கடந்த 28 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 65 ஆயிரம் பேர் மட்டுமே கண் தானத்திற்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் அந்த சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வரை 1,500 பேர் கண் தானம் செய்துள்ளனர் என்றார்.