கோலாரில் 890 கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு-அதிகாரி தகவல்
கோலாரில் 890 கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு உள்ளது என்று துணை இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குனர் வெங்டேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கோலார் மாவட்டத்தில் மொத்தம் 2½ லட்சம் கால்நடைகள் உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக பால் கரக்கும் பசுக்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் கோலாரில், 890 கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அவைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கோமாரி நோயில் இருந்து பாதுகாக்க 2 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 ஆயிரம் கால் நடைகளுக்கு தடுப்பூசி போடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில் கோமாரி நோய் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story