9 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்


9 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்ட திருவிழாவையொட்டி 9 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று கலெக்டர் ரமேஷ் கூறியுள்ளார்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு திருவிழா

இதுதொடர்பாக சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்ட திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவிற்கென ஹெலி டூரிசம் எனப்படும் தனிப்பட்ட ஹெலிகாப்டர் வரவழைக்கப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் மூலம் பாபாபுடன் கிரி மலை மற்றும் சிக்கமகளூருவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடலாம்.

இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருபவர்களுக்கு சிறப்பு பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வாடகை கார்கள் மற்றும் வாகனங்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வரவேண்டும். இதற்கான பொறுப்பு சுற்றுலாத்துறைக்கு உள்ளது.

9 நாள் விளையாட்டு போட்டி

மேலும் திருவிழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் வருகிற 13-ந் தேதி (நாளை) தொடங்குகிறது. 21-ந் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் gov.it jinachim என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த விழாவில் முக்கியமாக கைப்பந்து, கபடி, கால்பந்து, கூடைப்பந்து, கோகோ, பேட்மிண்டன் ஆகிய போட்டிகள் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சிக்கமகளூரு திருவிழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேளான் கண்காட்சி

இதை தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு கூறியதாவது:- சிக்கமகளூரு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளான் கண்காட்சி மேலா மற்றும் உணவு பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. விளை பொருட்கள் வைப்பதற்காக ஸ்டால்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஸ்டால் வைக்க விரும்புபவர்கள் முன் பதிவு செய்யவேண்டும். மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்படும். இந்த விழாவையொட்டி மக்கள் வந்து செல்வதற்கு இலவச அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story