பல கோடி சொத்து, ஆடம்பர வாழ்வை துறந்து 9 வயதில் துறவியான வைர வியபாரியின் மகள்...!
பல கோடிகளுக்கு சொந்தகாரியான குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மகள் 9 வயதில் தீட்சை பெற்று துறவியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
சூரத்,
குஜராத்தில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில், பல கோடி மதிப்புள்ள சொத்துகளையும் ஆடம்பர வாழ்வையும் துறந்து, மிக எளிமையான வாழ்முறையை மேற்கொள்ளும் துறவியாக அவர் தீட்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
தனேஷ் -அமி சங்வி தம்பதியின் மூத்த மகள் தேவான்ஷி. இவர் பல நூறு பேர் முன்னிலையில் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியல் குடும்ப உறுப்பினர்கள் சூழ தீட்சை எடுத்துக் கொண்டார்.
தனேஷ், சங்வி மற்றும் சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த நிறுவனம் 3 தலைமுறைகளாக வைரத்தை பட்டைத் தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
மிகக் குறைந்த வயதிலிருந்தே தேவான்ஷி துறவறத்தில் நாட்டம் ஏற்பட்டதாகவும், அவருக்கு 5 மொழிகள் தெரியும் என்றும், பல்வேறு திறன் படைத்தவராக இருக்கிறார் என்றும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் சகோதரி உள்ளார்.
"தேவன்ஷி சிறுவயதில் இருந்தே துறவறத்தில் நாட்டம் ஏற்பட்டதாக காட்டினார். சிறு வயதிலிருந்தே துறவு வாழ்க்கையை பின்பற்றி வருகிறார் என்று அவரது உறவினர் ஒருவர் கூறினார்.