இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுவது நிறுத்தம் கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை


இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுவது நிறுத்தம்  கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை
x

கொரோனாவுக்காக இலவச தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250 கொடுத்து போட்டுக் கொள்ளலாம்.

பெங்களூரு: கொரோனாவுக்காக இலவச தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250 கொடுத்து போட்டுக் கொள்ளலாம்.

91 சதவீதம் பேர் போடவில்லை

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டியும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்றுடன் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுவது நிறைவு பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதியில் இருந்து நேற்று வரை இலவச பூஸ்டர் தடுப்பூசி போடு்ம் பணிகள் நடைபெற்றது. ஆனால் கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 வயது மேல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக இலவச பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

ரூ.250 கட்டணம்

அதன்படி கர்நாடகத்தில் 4.57 கோடி பேரில் வெறும் 86 லட்சம் பேர் மட்டும் பூஸ்டர் தடுப்பூசியை போட்டு கொண்டு உள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால், தடுப்பூசியை செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர். அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுவதை மத்திய அரசு நிறுத்தி இருப்பதன் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250 கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.


Next Story