மக்களவையில் 91 தனிநபர் மசோதா தாக்கல்


மக்களவையில் 91 தனிநபர் மசோதா தாக்கல்
x

மக்களவையில் பல்வேறு எம்.பி.க்கள் சார்பில் 91 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதுடெல்லி,

மக்களவையில் பல்வேறு எம்.பி.க்கள் சார்பில் 91 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் முக்கியமாக அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்காக கட்டமைப்பை உருவாக்குமாறு புரட்சிகர சோசலிஷ்ட் கட்சி எம்.பி. பிரேமச்சந்திரன் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிகளை வகுக்கும் 84-வது சட்டப்பிரிவைத் திருத்துவதற்கான திருத்த மசோதாவை ஓவைசி அறிமுகப்படுத்தினார்.

தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மசோதாவை தாக்கல் செய்தார்.

இதைப்போல தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்தனர்.


Next Story