புதுச்சேரியில் 92.92 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி...!


புதுச்சேரியில் 92.92 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி...!
x

புதுச்சேரி மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.92 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விவரங்களை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மோதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலில் 8 ஆயிரத்து 335 மாணவர்கள், 8 ஆயிரத்து 180 மாணவிகள் என 16 ஆயிரத்து 515 பேர் தேர்வுகளை எழுதினார்கள். இதில் 7 ஆயிரத்து 476 மாணவர்கள், 7 ஆயிரத்து 870 மாணவிகள் என 15 ஆயிரத்து 346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 92.92 சதவீதமாக உள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 173 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அதாவது அரசுப்பள்ளிகள் 85.01 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. பகுதி வாரியாக பார்க்கும்போது புதுச்சேரி பகுதியில் 93.45 சதவீதமும், காரைக்காலில் 90.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

114 பள்ளிகள்

புதுவை, காரைக்காலில் 114 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் புதுச்சேரியை பகுதியை 93 பள்ளிகளும், காரைக்கால் பகுதியில் 21 பள்ளிகளும் உள்ளன. அரசுப்பள்ளிகள் மட்டும் 11 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளன.

கணக்கு பாடத்தில் 34 பேரும், அறிவியல் பாடத்தில் 64 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4 பேர் என 102 பேர் 100-க்கு 100 மார்க் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story