தண்ணீர் வாளியில் தவறி விழுந்து1 வயது குழந்தை பலி


தண்ணீர் வாளியில் தவறி விழுந்து1 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒசநகர் அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தையை உயிரிழந்தது.

சிவமொக்கா:-

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா சோனாலே பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒசகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மனைவி வீணா. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சங்கத் என்ற 1 வயதில் குழந்தை இருந்தது. ஹரிஷ் மற்றும் அவரது மனைவி வீணா அப்பகுதியில் உள்ள ேதாட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் தோட்ட வேலைக்கு ஹரிஷ் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர். குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. இதையடுத்து திடீரென முழித்து கொண்ட குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது குழந்தை வீட்டின் வெளியே தண்ணீருடன் இருந்த வாளியில் விளையாடிய போது தவறி உள்ே்ள விழுந்தது. இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து வேலை முடிந்து ஹரிஷ், வீணா வீட்டிற்கு வந்து குழந்தையை தேடினர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள இடங்களில் தேடிபார்த்தனர். அப்போது குழந்தை வாளியில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஒசநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story