டிராக்டர் மோதி 3 வயது குழந்தை சாவு
பெங்களூரு அருகே டிராக்டர்மோதி 3 வயது குழந்தை பரிதாப சாவு
பெங்களூரு:-
குழந்தை சாவு
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் பகுதியில் வசித்து வருபவர் ஹரீஷ்சிங். இவரது மனைவி தீபிகா ராணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. ஹரீஷ் சிங் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தர்ஷனை, அவரது பாட்டியான தேவி வெளியே அழைத்து சென்றிருந்தார். தேவியின் கையை பிடித்து குழந்தை தர்ஷன் நடந்து சென்றது.
இந்த நிலையில், தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள கிராசில் வைத்து பாட்டியின் கையை உதறிவிட்டு குழந்தை தர்ஷன் திடீரென்று சாலையில் ஓடியது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு டிராக்டர், தர்ஷன் மீது மோதியது. இதில், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி குழந்தை தர்ஷன் இறந்து விட்டது.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்புரா போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாட்டியுடன் சென்ற குழந்தை தர்ஷன், திடீரென்று அவரது கையை உதறிவிட்டு குழந்தை ஓடிய போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதி சக்கரத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.
குழந்தையின் உடலை பார்த்து ஹரீஷ்சிங், அவரது மனைவி கதறி அழுதார்கள். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.