பெற்ற மகளின் கண்கள் வழியே உலகை பார்க்கும் பார்வையற்ற பெற்றோர்; வைரலான வீடியோ


பெற்ற மகளின் கண்கள் வழியே உலகை பார்க்கும் பார்வையற்ற பெற்றோர்; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 17 Dec 2022 3:56 PM GMT (Updated: 17 Dec 2022 3:59 PM GMT)

பார்வையற்ற பெற்றோருக்கு தினமும் உணவு வாங்கி கொடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்லும் சிறுமியின் செயலை சமூக ஊடக பயனாளர்கள் பாராட்டி உள்ளனர்.



புனே,


மராட்டியத்தின் மும்பை நகரில் மீரா சாலையில் உணவகம் ஒன்று உள்ளது. இதற்கு சிறுமி ஒருவர் தினசரி வருகை தருவது வழக்கம். அவர் தன்னுடன், பார்வையற்ற பெற்றோரையும் அழைத்து வருகிறார். அவர்களுக்கு உணவு வாங்கி தந்து, சாப்பிட செய்கிறார். அதன்பின் வீட்டுக்கு அவர்களை அழைத்து செல்கிறார்.

தினமும் நடக்கும் இந்த நிகழ்வை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ளார். அவர் அந்த பதிவில், முதன்முறையாக அவர்களை பார்த்தபோது உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்த உணவகத்திற்கு வருகின்றனர். பெற்றோர் பார்வையற்றவர்கள். ஆனால் அவர்களது மகளின் கண்கள் வழியே இந்த உலகை அவர்கள் பார்க்கின்றனர். இந்த சிறுமி பல விசயங்களை நமக்கு கற்று தருகிறார்.

உங்களது பெற்றோரை விட உங்களை வேறு யாரும் நன்றாக கவனிக்க முடியாது. அதனால், உங்களை விட்டு செல்லும் முன்பு அவர்களை நீங்கள் நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என அந்த நபர் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை 10.9 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்வையிட்டு உள்ளனர். பலரும் அந்த சிறுமிக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.



Next Story