காதல் திருமணம் செய்த வாலிபரின் பெற்றோர் மீது தாக்குதல்
காதல் திருமணம் செய்த வாலிபரின் பெற்றோர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் பாலகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோரகநாத் சவுகான். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் அமர்(வயது 22). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா(24) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு அர்ச்சனாவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 11-ந் தேதி காதல் ஜோடி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சனாவின் பெற்றோர், குடும்பத்தினர் அமரின் பெற்றோரான கோரகநாத் சவுகாத் மற்றும் கவிதாவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதற்கிடையே தனது பெற்றோரை காப்பாற்றும்படி அமர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
Related Tags :
Next Story