ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் படுகொலை


ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் படுகொலை
x
தினத்தந்தி 1 April 2023 10:00 AM IST (Updated: 1 April 2023 10:08 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் ஓரினச்சேரிக்கைக்கு மறுத்த சிறுவனை கொன்று உடலை புதருக்குள் வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் ஓரினச்சேரிக்கைக்கு மறுத்த சிறுவனை கொன்று உடலை புதருக்குள் வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிறுவன் மாயம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி பெண்டிகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட தொட்டமணி காலனியை சேர்ந்தவர் உசேன் சாப். இவரது மகன் நசீம் உசேன் சாப் (வயது 8). இந்த நிலையில் நேற்று முன்தினம் காைல வீட்டில் இருந்து வெளியே சென்ற நசீம், திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவனை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் நசீம் கிடைக்கவில்லை. இதனால், உசேன்சாப் இதுகுறித்து பெண்டிகேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனை தேடி வந்தனர்.

புதருக்குள் உடல்

இந்த நிலையில், நேற்று காலை தொட்டமணி காலனி பகுதியில் உள்ள புதருக்குள் ஒரு உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் புதருக்குள் கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் அது மாயமான நசீம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சிறுவனின் உடலை பார்த்து அவனது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால்...

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் யாரோ மர்மநபர்கள் சிறுவனை கொலை செய்துவிட்டு உடலை புதருக்குள் வீசி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story