சைக்கிள் ஓட்டி சென்ற சிறுவன் வேனில் சிக்கி பலி


சைக்கிள் ஓட்டி சென்ற சிறுவன் வேனில் சிக்கி பலி
x

ஹெப்பால் அருகே சைக்கிளை வேகமாக ஓட்டி சென்ற சிறுவன் வேனில் சிக்கி பாிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு:-

தின்பண்டம் வாங்க...

மைசூரு (மாவட்டம்) டவுன் ஹெப்பால் பகுதியை சோ்ந்தவர் ராமசெட்டி. இவரது மகன் சரண்பாலாஜி (வயது 10). சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை சரண்பாலாஜி தனது நண்பருடன் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றான். அங்கு அவர்கள் தின்பண்டங்களை வாங்கிவிட்டு வேகமாக சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது அவா்கள் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த வேனின் பக்கவாட்டில் சரண்பாலாஜியின் சைக்கிள் மோதியது.

சக்கரத்தில் சிக்கி...

இதில் நிலைத்தடுமாறி சைக்கிளில் இருந்து சரண்பாலாஜி வேனின் பின்பக்க சக்கரத்தில் விழுந்தான். வேனின் டயர் சரண்பாலாஜி மீது ஏறி இறங்கியது. அதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தான். மேலும் சரண்பாலாஜியின் நண்பன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஹெப்பால் போலீசார் சரண்பாலாஜியின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story