ஜம்முகாஷ்மீர்: எல்லை காவல்படை வீரர்கள் பயணம் செய்த பஸ் கவிழ்ந்து விபத்து - 6 வீரர்கள் உயிரிழப்பு


ஜம்முகாஷ்மீர்: எல்லை காவல்படை வீரர்கள் பயணம் செய்த பஸ் கவிழ்ந்து விபத்து - 6 வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Aug 2022 12:42 PM IST (Updated: 16 Aug 2022 12:49 PM IST)
t-max-icont-min-icon

இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

ஜம்முகாஷ்மீர்,

ஜம்முகாஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளானது .பஸ்சில் இந்தோ- தீபெத் எல்லை காவல் படை வீரர்கள் 37 பேர், ஜம்மு காஷ்மீர் போலீசார் 2 பேர் என மொத்தம் 39 வீரர்கள் பயணித்தனர்.

இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்,மேலும் பலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவீரமாக நடந்து வருகிறது.


Next Story