மங்களூரு மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் போலீசார் வழக்கு பதிவு
நடுக்கடலில் மீன் பிடித்தபோது மங்களூரு மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பாண்டேஸ்வர் போலீசார் வழக் குபதிவு செய்துள்ளனர்.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் கடந்த 8-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லையை தாண்டி, தமிழக மாநிலம் கன்னியாகுமரி மாவட்ட கடல்பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இதை தமிழக மீனவர்கள் பார்த்துள்ளனர். கர்நாடக மீனவர்கள், எப்படி எங்கள் எல்லைக்குள் வரலாம் என்று கூறி, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதை கர்நாடக மீனவர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த காட்சிகளை மீனர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானது. மேலும் இரு மாநிலத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கர்நாடக மீனவர்கள் மீன்வளத்துறை இணை இயக்குனர் ஹரீஷ் குப்தாவிற்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மீன்வளத்துறை இணை இயக்குனர் ஹரீஷ் குப்தா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை இணை இயக்குனர் ஹரீஷ் குப்தா கூறுகையில்;- கர்நாடக மீனவர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்க தக்கது. கர்நாடக மீனவர்களுக்கு கன்னியாகுமரி கடலில் 15 நாட்டிகல் மையில் இருந்து 200 நாட்டிகல் மையில் வரை மீன் பிடிக்க அனுமதி உண்டு. கர்நாடக மீனவர்கள் விதிமுறைகளை மீறினார். உடனே எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் தாக்குதல் நடத்தியது கண்டிக்க தக்கது. இந்த தாக்குதல் குறித்து மீன் வளத்துறை இயக்குனருக்கு தகவல் அளித்துள்ளேன். அவர் நடவடிக்ைக எடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து பாண்டேஸ்வர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.